×

அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: அஜித் குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். கடந்த 2019ம் ஆண்டு ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா லாக்டவுன் காரணமாக அவ்வப்போது படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், படம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதையடுத்து பொறுமை இழந்த அஜித் குமார் ரசிகர்கள், ‘வலிமை’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர். ேதர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் கேட்டனர். சென்னைக்கு பிரதமர் வந்திருந்தபோது, அப்டேட் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து கிரிக்கெட் மற்றும் யூரோ கால்பந்து போட்டி மைதானத்திலும் அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று ஐதராபாத்தில் ‘வலிமை’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. இதில் அஜித் குமார் பங்கேற்று நடித்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால், அஜித் குமார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Mohamad ,Chennai ,Boney Kapoor ,H. Vinod ,Hyderabad ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...